இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டி நாடாளுமன்றம்: முத்தரசன் பங்கேற்பு

பெரம்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டி நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையம் எதிரே இன்று காலை போட்டி நாடாளுமன்றம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்களின் பிரச்னைகளை விவாதிக்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, திமுக பகுதி செயலாளர் முருகன், விசிக சார்பில் கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 இதில் விவசாய, வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

Related Stories:

>