மல்லாடி நிறுவனம், ஸ்கடர் நினைவு மருத்துவமனை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சி-கலெக்டர் பங்கேற்பு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், சிப்காட் மல்லாடி நிறுவனம், ஸ்கடர் நினைவு மருத்துவமனை சார்பில் மல்லாடி நிறுவன வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது. மல்லாடி டிரக்ஸ் நிறுவன துணை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரீத்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசுகையில், ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம், சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதனால், கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் பாதுகாத்து கொள்ளலாம்’ என்றார்.

Related Stories:

More
>