தொடர் மழையால் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகி உதிர்ந்தன-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : தொடர் மழையால்  ஊட்டி ரோஜா பூங்காவில் மலர் செடிகள் அழுகியுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.நீலகிரி  மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறை  கட்டுபஙபாட்டில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை வெளியூர் மற்றும்  வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்வது வழக்கம். இந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுபடுத்தும்  நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் நீலகிரியில் உள்ள அனைத்து  சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

 4 மாதங்களாக சுற்றுலா தலங்கள்  மூடப்பட்டிருந்ததால் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் பூங்காக்கள், படகு இல்லங்கள்  மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் முதல்  நீலகிரியில் ஊட்டி அரசு தாவரவியல் உள்ளிட்ட பூங்காக்கள், ஊட்டி படகு  இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை திறக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து  சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டு  வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவை பார்வையிட சுற்றுலா பயணிகள்  வந்து செல்லும் நிலையில் ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக ரோஜா மலர்கள்  அழுகியும், உதிர்ந்தும் காணப்படுகிறது. இதனால் பூங்காவில் பூக்கள்  குறைவாகவே உள்ளது. இதனால் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள்  ஏமாற்றமடைந்தனர்.

Related Stories:

>