×

சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் ஐ.ஐ.டி நிபுணர் குழு ஆய்வு

சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க்கில் சுமார் 1000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அங்கு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு 3 ஆண்டுகளாக புதிய குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது அந்த குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கிருக்கக்கூடிய பொதுமக்களுக்கு அந்த வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வீட்டிற்கு குடியேறிய பொதுமக்கள் வீட்டின் உள்ளே சென்றவுடன் வீட்டின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவுபெறவில்லை. வீடுகள் தரமற்ற முறையில் கட்டுப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தான் அந்த வீடுகளில் உள்ள சுவர், ஸ்லாப் உள்ளிட்ட பகுதிகள் தொட்டாலே உதிரக்கூடிய நிலையில் தான் கட்டப்பட்டிருந்தது.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக நேரடியாக குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரன் நேரடியாக களத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தில் பதிலளித்து பேசிய தா.மோ.அன்பரசன் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு ஐ.ஐ.டி நிபுணர் குழுவிற்கு பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை கே.பி.பார்க்கில் உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளில் தற்போது ஐ.ஐ.டி பொறியாளர் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 5திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : IIT Expert Panel ,Puliyanthoppu Housing Board ,Chennai , IIT, Puliyanthoppu, Housing Board
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...