×

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் என கூறப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லெனது முதல் மிதமான மழையும், ஒரீஐ இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். மேலும் திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 27-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லெனது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். திண்டுக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை  மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.


Tags : Tamil Nadu ,Puthuvai ,Karaikal ,Meteorological , Chance of rain in Tamil Nadu, Puthuvai and Karaikal today due to global warming .: Meteorological Center Information
× RELATED தமிழக பகுதிக்கு கடத்த இருந்த ₹40ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்