கூடலூர் எம்.எல்.ஏ., வீடு உள்பட 2 வீடுகளை சேதப்படுத்திய யானை..: யானைகளின் தொடர் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி உள்ள கூடலூர் எம்.எல்.ஏ., வீடு உள்பட 2 வீடுகளை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. கூடலூரை அடுத்த பொன்னூர், நாடுகாணி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து 5 வது நாளாக காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்று இரவு நாடுகாணி பகுதியில் உள்ள கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் வீடு உள்பட 2 வீடுகளை காட்டுயானைகள் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுவட்ட மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர். இதனால் காட்டுயானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். 

Related Stories:

More
>