×

நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தாமதம்: 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறவில்லை என புகார்

கன்னியாகுமரி: நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் 1431 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

2022 மார்ச் மாதம் பணிகளை முடிக்கும் வகையில் 87 கி.மீ தூரம் 2வது ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 40 சதவீத பணிகள் கூட முடிவடையாத நிலையில் இருப்பதாக ரயில் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரயில் பாதை அமைக்க சுமார் 75 ஏக்கர் நிலம் இன்னும் கையகப்படுத்தவில்லை என்றும் திட்டப்பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததுமே கால தாமதத்திற்கு காரணம் என்று ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக போதிய நிதி ஒதுக்கி இரட்டை ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nagercoil, Thiruvananthapuram
× RELATED யானை தாக்கி விவசாயி பலி