செங்கல்பட்டு அருகே சொகுசு கார் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள சொகுசு கார் தயாரிப்பு தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மகேந்திரா சிட்டியில் உள்ள பிஎம்டபுள்யூ சொகுசு கார் தயாரிப்பு தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் கடந்த 17 மாதங்களாக நடப்பு தவணை ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பாக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு புதிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிடுமாறு ஆலை நிர்வாகம் நிர்பந்திப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>