மேற்கு தொடர்ச்சிப்பகுதியில் கனமழை கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம் : மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை தந்து குளித்து மகிழ்வர்.

மழையின்மையால் கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை  பெய்தது. இதன்காரணமாக,  கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிக்கு கீழே உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து குளங்கள் நிறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: