×

நன்றி குங்குமம் தோழி

சொந்த வீடு... சொல்லும்போதே சுகமாய் இருக்கிறதல்லவா! பெருநகரங்களின் சந்து பொந்துகளில் நடையாய் நடந்து... நாயாய் அலைந்து... புரோக்கர்களுக்கு சுளையாய் கமிஷனைக் கொடுத்து புறாக் கூண்டு மாதிரி இருக்கும் வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நடுத்தரவாசி ஒவ்வொருத்தருக்குள்ளும் தவிர்க்கவே முடியாத அழகான கனவாக இருப்பது சொந்த வீடு!

‘எப்படியாவது, கடன்பட்டாவது ஒரு வீட்டைக் கட்டி முடிச்சிடணுங்க...’ என்று அலுப்பாய் சொல்லும் நாற்பத்தைந்து, ஐம்பது வயது சராசரி சம்பளதாரிகள் இங்கே ஏராளம்! இப்படிப்பட்டவர்களுக்கும், நீண்ட நாட்களாக சொந்த வீடு கனவோடு இருப்பவர்களுக்கும், வீடு வாங்குவதற்கான அனைத்து நிதி உதவி, அதற்கான ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் விதமாக தினகரன் நாளிதழுடன் இணைந்து ஜோன்ஸ் ஃபவுண்ேடஷன் மற்றும் அத்வைத்தா ஹோம்ஸ் கட்டட நிறுவனங்கள் சார்பில் ‘வீட்டு மனைக் கண்காட்சி’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்றன. வீடு வாங்குபவர்களுக்கு உடனடி கடன் வசதி, தவணை முறையில் வீடு வாங்குதல், மனை விற்பனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் ஒரு வீடு கட்டும் போது எங்கு சமையல் அறை இருக்க வேண்டும்? பூஜை அறையினை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்தும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் ஆலோசனையும் கண்காட்சியில் வழங்கப்பட்டது.

ஜோன்ஸ், ஜோன்ஸ் ஃபவுண்டேஷன்

‘‘மினிமம் ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.1.5 கோடி வரைக்கும் பட்ஜெட்டில் மக்களுக்கு தகுந்தாற் போல், நிறைய லே அவுட்டில் செய்து தருகிறோம். ஜோன்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ரூ.50,00,000 பட்ஜெட்டில் வில்லா கொடுக்கிறோம். வங்கிகள் மூலம் உடனடி லோன் வசதிகளும் ஏற்பாடு செய்து தருகிறோம். சிலர் வீடாக வாங்க நினைப்பார்கள். ஒரு சிலர் நிலமாக முதலீடு செய்ய விரும்புவார்கள். அவரவரின் தேவைக்கு ஏற்ப வீடாகவோ அல்லது நிலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். மேலும் வில்லா டைப் வீடுகளும் உள்ளன.

இவை எல்லாம் நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கே உள்ளது. இது மட்டுமல்ல உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்பவும் வீடுகளை அமைத்து தருகிறோம். இனி யாரும் தனக்கென்று ஒரு வீடு இல்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. புறா கூண்டு போல் அமைக்கப்பட்டு இருக்கும் வாடகை வீட்டிற்கு குட்பை சொல்லிட்டு சொந்தமாக வீடு வாங்க எங்களிடம் வாங்க’’ என்றார் ஜோன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜோன்ஸ்.

மாதுரி பீடா,

அத்வைத்தா ஹோம்ஸ்


‘‘மக்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் வெளிக் கொண்டு வரும் விதமாக, அருமையான எக்ஸ்போ தினகரன்-சன் டிவி குழுமம் செய்திருக்கிறார்கள். உண்மையிலுமே இந்த விஷயத்தில், எங்கள் துறை சார்ந்தவர்களால் நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலீடு என்பது எல்லோருக்கும் பயம் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. பண மதிப்பிழப்பு பிரச்சினை, பத்திரப்பதிவிலிருந்து வீட்டு மனை வாங்குவது வரை ஏற்பட்ட சிரமங்கள் என்றிருந்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும், எங்களுக்கும் அதே வேலையில் மக்களின் நலன் கருதியும்  ஒரு தெளிவு ஏற்படுத்தும் விதமாக அமைந்துஇருக்கிறது இந்த எக்ஸ்போ” என்றார் அத்வைத்தா ஹோம்சின் நிறுவனரான மாதுரி பீடா.

‘‘இருபது லட்சத்தில் ஆரம்பித்து அறுபது லட்சம் வரை ப்ராஜெக்ட்டுகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சிங்கில் BHK, டபில் BHK, ட்ரிபில் BHK என வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றார் போல் பெற்றுக் கொள்ளலாம். எங்களது ப்ராஜெக்ட்டுகள் ஐடி பார்க், கோயில், பள்ளிகள் என எல்லா வசதிகளும் கொண்ட சிறுசேரிக்கு அருகில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது’’ என்றார்.

தொகுப்பு: அன்னம் அரசு

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!