எல்ஐசி.யில் நேரடி அன்னிய முதலீடு: ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை

புதுடெல்லி: தற்போதைய அன்னிய நேரடி முதலீடு கொள்கையின்படி, காப்பீட்டு துறையில் 74 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதி எல்ஐசிக்கு  பொருந்தாது. எல்ஐசி.யின் மூலம் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த ஜூலையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், எல்ஐசி.யில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நிதி சேவைகள் துறை, முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தி வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியுள்ளன.

Related Stories:

>