கிரிக்கெட் வலை பயிற்சி மையம்: முன்னாள் ரஞ்சி வீரர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் வலை பயிற்சி மையத்தை, முன்னாள் ரஞ்சி வீரர் தேவ் ஆனந்த் திறந்து வைத்தார். காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் வீரர் சதீஷ் இளம் கிரிக்கெட் வீரர் , வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் கிரிக்கெட் வலை பயிற்சி மையத்தை முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் தேவ் ஆனந்த் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்து பேசியதாவது.

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்து காஞ்சி மாவட்ட வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைய வேண்டும். புதிய மாவட்டம் உருவாகியுள்ளதால் புதிய வீரர்களை தேர்வு செய்வது, இவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். இதனால் வீரர்கள் கடின பயிற்சியுடனும், ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்றார்.இதில் முன்னாள் காஞ்சி நகர கிரிக்கெட் வீரர்கள் ஆனந்த், சுரேஷ், அன்பு, வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>