காஞ்சி சங்கரா கலை கல்லூரியில் முப்பெரும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம் இணைந்து முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாள், மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு என முப்பெரும் விழாவுக்கு சங்கரா பல்கலைக்கழக துணைநேந்தர் எஸ்.வி.ராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் ரிஷிகேஷன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த முப்பெரும் விழாவில் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>