×

மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம்: செங்கை கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய வேளான் அபிவிருத்தி திட்டம் மூலம், மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம், மீன் வளர்ப்பை விரிவுபடுத்தி மானியம் வழங்கும் திட்டத்தில்  பயன்பெறலாம். இதையொட்டி, மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து நீர் வளர்ப்புகுளம்  அமைக்க 50 சதவிதம் மானியமாக ரூ.3.5 லட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்பரப்பில் மீன்வளர்ப்பு செய்யப்படும் உள்ளீட்டு செலவின தொகையாக ரூ.1.5 லட்சத்தில் 40 சதவிதம் மானியமாக ரூ.60 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் சென்னை,  காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பு  நீலாங்கரை, எண் 2/501 கிழக்கு கடற்கரை சாலை, மீன்வளம் மற்றும் மீனவர் நலந்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - 24492719, 8489189720 / 8489911333 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai , Fisheries, Subsidy, Collector
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...