×

சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பதாகை: கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்

காஞ்சிபுரம்: சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பதாகையை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவையுள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 திட்டத்தின் பெயர் பதாகையை கலெக்டர் மற்றும் திட்டத்தின் தலைவர் ஆர்த்தி வெளியிட, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்  மதியழகன் பெற்றுக் கொண்டார், தொடர்ந்து, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சைல்டு லைன் 1098 பெயர் பதாகையை வைக்க கேட்டு கொண்டார்.

குழந்தைகள் யாரேனும் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் உடனே சைல்டு லைன் 1098 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏஎஸ்பி ஜெயராமன், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முத்துசாமி, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, சைல்டு லைன் நோடல் இயக்குனர் பிரேம்ஆனந்த், மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரபு, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முதன்மை மேலாளர்கள் செல்வகுமார், மோகனவேல், முதுநிலை மேலாளர்கள் தயாளன் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector Aarti , Awareness Banner, Collector, Publishing
× RELATED காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்...