சமுதாய பல் மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்

காஞ்சிபுரம்: இந்திய பல் மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் சமுதாய பல் மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் பல் மருத்துவ சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பற்கள் சொத்தையால் சிதைவடையும்போது, பற்களை பிடுங்காமல் பாதுகாக்க வேர் சிகிச்சை சமீப காலமாக மிக அவசியமாகிறது. பல் மருத்துவர் வேர் சிகிச்சை செய்யும் தருவாயில், கொரோனா கிருமி நோயாளிக்கு வாய் வழியாக பரவாமல் தடுக்க ரப்பர் அணை எனும் கருவியின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. இதில் சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயந்த பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் அன்புச்செல்வி மற்றும் 45க்கும் மேற்பட்ட பல்மருத்துவ சங்க மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>