வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவு மீறல் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை: போலீசில் பெண் புகார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் கேசவராஜ்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளுக்கு பணிதள பொறுப்பாளராக நியமிக்கக்கோரி, அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சு (29) என்ற பெண் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார்.

அதன்டிப்படையில், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) நடவடிக்கை மேற்கொண்டு மஞ்சுவை பணிதள பொறுப்பாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இருப்பினும், ஊராட்சி செயலாளர் நரசிம்மன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் செயல்படுவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அதே நபரை வைத்து வேறொரு பெயரில் பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர் நியமித்த பணிதள பொறுப்பாளர் நியமனம் மீறல் தொடர்பாக புகார் செய்தால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவரை பணி செய்யாவிடாமல் தடுப்பதாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய புகார் செய்வோம் என்று மிரட்டுவதாக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கோதண்டன் மற்றும் ஊராட்சி செயலாளர் நரசிம்மன் ஆகியோர் மிரட்டுவதாக கூறி மஞ்சு என்பவர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவை பின்பற்றாமல் செயல்படும் ஊராட்சி செயலாளரின் நடவடிக்கைகள் கிராம மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories:

More
>