×

ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்: விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட கிளை துவக்க விழா,  உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஆஞ்சநேயலு தலைமை தாங்கினார். சென்னை மண்டல தலைவர் துரைசாமி, செயலாளர் சைதை சிவா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செந்தில்வேலன், பொருளாளர் கோட்டீஸ்வரன், கவுரவ தலைவர் வெங்கடாத்திரி, உயர்மட்ட குழு தலைவர் விஜயபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் புதிய கிளை துவக்கி அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் ேபசியதாவது, `ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரமாக ஆரணி, கொசஸ்தலை 2 ஆறுகள் உள்ளது. இது விவசாயிகளின் நஞ்சை நிலத்தை பாதுகாக்கிறது. மேலும் விவசாயிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தச்சூர் முதல் சித்தூர் வரை விவசாய நிலங்களை அழித்து போடப்படும் 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துகிற நடவடிக்கைக்கு எதிராக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தொழில் வளம் மற்றும் சாலை அகலப்படுத்து வதற்கு விவசாயிகள் எதிரானவர்கள் அல்ல. விவசாய நிலங்களை அழித்து சாலை போடுவதை எதிர்க்கிறோம். இத்திட்டத்தை மாற்றுதிட்டத்தில் செயல்படுத்துங்கள். விவசாயிகள் கருத்தை கேட்டு ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். காட்டுப்பள்ளியில் அதானி நிறுவனம் அமைக்க இருக்கும் துறைமுகத்தை ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்த்து விட்டு விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கின்ற திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுத்துள்ளார். விவசாயிகள் கருத்தை கேட்டு இத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்.

வெளி மாநில எல்லை தமிழகத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு கொள்ளை முடிவாக எடுத்து தடுக்க வேண்டும். அனுமதிக்க கூடாது. மேலும் மணல் குவாரி வர இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதற்கும் அனுமதிக்ககூடாது. இதை கண்டித்து ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு 6 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் சார்பில் மாபெறும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். மேலும், கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை ரூ.1600 கோடி தமிழக அரசு தருவதாக கூறியிருக்கிறது. அதை விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவில் தரும்,’ என கூறினார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏரிகள் குடிமராமத்து பணிகளில் நடந்த முறை கேடுகளை விசாரிக்க வேண்டும். ஆரணியாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


Tags : Route 6 ,Uthukottai , Uthukottai, 6 lanes, hunger strike
× RELATED ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பதுக்கி...