அதிமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படவில்லை: துணை சபாநாயகர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசியதாவது: குடிநீர் வடிகால் வாரியம் கலைஞர் கொண்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வாரியமே செயல்படவில்லை. எனவே, கூட்டு குடிநீர் திட்டத்தில்  தனி கவனம் எடுக்க வேண்டும். உரிய முறையில் பணியாளர்களை நியமித்தால்தான் குடிநீர் வழங்க முடியும். கூட்டு குடிநீர் திட்டங்களை முறைப்படுத்த  வேண்டும். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: கடந்த 10 ஆண்டுகளாக கூட்டு குடிநீர் திட்டம் எதுவுமே செயல்படுத்தவில்லை என்ற ஒரு தவறான செய்தியை சொல்லியிருக்கிறார். கொள்கை விளக்க குறிப்பிலே இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான்.

சபாநாயகர் அப்பாவு: பராமரிப்பு தான் சரியில்லை என்று சொன்னாரே தவிர திட்டம் எதுவும் நிறைவேற்றவில்லை என்று அவர் சொல்லவில்லை. பராமரிப்பு அவுட் சோர்சிங் முறையில் இருப்பதால் தவறு நடந்துள்ளது. சரியாக செய்யவில்லை என்று சொல்லியுள்ளார். அதற்கு அமைச்சர் பதில் சொல்வார். பிச்சாண்டி:திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று சொல்லவில்லை.இருக்கின்ற திட்டங்களுக்குஅதிமுக ஆட்சியில் பணம் கொடுக்கவில்லை. அவுட்சோர்சிங்கில் கொடுத்து அவர்களுக்கு பணம் கொடுக்காமல் பாக்கி வைத்ததால் அவர்கள் ஆட்களை நியமிக்காமல். கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படாமல் இருப்பதை தான் சுட்டி காட்டினேன்.

Related Stories:

More
>