செம்பரம்பாக்கம் ஏரி உடைப்புக்கு அதிமுக ஆட்சிதான் பொறுப்பு ஏற்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ கத்தில், கடந்த 2015 டிசம்பரில் இயற்கையின் சீற்றத்தினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தாலும், அதை அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியாளர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும், தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்ட பேரழிவுகளையும் நிச்சயம் தடுத்திருக்க முடியும்.

ஆனால், இத்தகைய பேரிழப்பிற்கு காரணமான அதிமுக உண்மையை மூடிமறைக்கிற வகையில் கருத்துகள் கூறுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் இத்தகைய பேரழிவு ஏற்படுவதற்கு அதிமுக ஆட்சி தான் பொறுப்பாகும் என்பதை நினைவுபடுத்த வேண்டிய காரணத்தினால் இதை தெளிவுபடுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: