கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதியில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.மேலும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை, வெப்ப பரிசோதனைக்கு பின், வளாகத்தில் அனுமதிக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை, ஆசிரியர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேர கெ௱ரோனா தடுப்பூசி மையம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்களை மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்குள்அனுமதி இல்லை” என்றார்.

Related Stories:

>