பொது சொத்துகளை சூறையாடும் ஒன்றிய அரசு: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிடப்பட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, பொது நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளை  தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவிற்கு நிதி திரட்டுவது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலை என பல்வேறு இடங்களில் அரசுக்கும், பொதுத்துறைக்கும் சொந்தமான மக்களின் சொத்துகளை தனியாருக்கு விற்பது மக்களின் சொத்துகள் மீது அரசே நடத்தும் சட்டப்பூர்வ கொள்ளையாகும். இது நாட்டின் சுயசார்பை ஆணிவேருடன் பிடுங்கி எறியும் அபாயகரமான நடவடிக்கையாகும். இந்த தீய விளைவுகளை உருவாக்கும் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன் மக்கள் உரிமை பெற்ற பொதுச் சொத்துகளை விற்பதை உடனடியாக கைவிட வேண்டும்.

Related Stories: