×

கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் : மாதிரி வடிவத்தை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் கட்டப்படுகிறது. 2.21 ஏக்கரில் கட்டப்படும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட தூணும் அமைக்கப்படுவதாக மாதிரி வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.23 ஏக்கரில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் எனவும், கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் இன்று பேரவையில் தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உதயசூரியன் வடிவத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. நினைவிடத்தின் முகப்பில் திறந்துள்ள பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் உதயசூரியன் வடிவத்தில் கட்டப்பட உள்ளது. பேனாவும் பிரம்மாண்ட தூணாக நிற்கப்போகிறது. கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் மக்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று வணங்கி விட்டு செல்கின்றனர். மேலும் கலைஞரின் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்கட்சிகள் வரவேற்பு அளித்தனர்.


Tags : Karunanidi ,Udhayasuni ,Chennai ,Marina ,TN Government , Artist Karunanidhi, in the marina, in the form of the rising sun, memorial
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...