×

சென்னையைப் போல பெரியகுளம் பகுதியிலும் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகள்-ஆய்வு நடத்தப்படுமா?

பெரியகுளம் : பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணைப்பகுதிக்கு மேல் உள்ள ராசிமலை என்னும் இடத்தில் பழங்குடியைச் சேர்ந்த 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் மேற்கூரை விரிசல் அடைந்தும், உடைந்தும், வீட்டின் அஸ்திவாரம் மழைநீரால் அரித்தும், வீடுகளில் விரிசல் உள்ளிட்டவைகளால் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு மலைவாழ் மக்கள் குடியிருந்த வீடுகளில் அனைத்தும் இடிக்கப்பட்டது. இதனை அடுத்து 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய தமிழக துணை முதல்வரும், நகர்புற வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சரான ஒ.பன்னீர் செல்வத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு 3 கோடியே 49 லட்சம் ரூபாயில் 35 கான்கிகீட் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது.

இந்த வீடுகளை 2020ம் ஆண்டு 6வது மாதத்தில் ஓர் ஆண்டிற்குள் 35 வீடுகளை கட்டி முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கட்டி முடித்த வீடுகளின் பூச்சுகளை கையால் அழுத்தினாலோ, தொட்டாலே பெயர்ந்து விழும் நிலையில் தரம் இல்லாமல் கட்டப்படுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
 மேலும் சென்னை புளியம்தோப்பில் குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டியிருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதே போன்று பெரியகுளம் அருகே மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள ராசி மலைப்பகுதியில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளும் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.எனவே, பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுவரும் வீடுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Periyakulam ,Chennai , Periyakulam: 35 tribal families live at Rasimalai above the Manjalar Dam near Periyakulam.
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்