×

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண்ணை உள்ளிட வேண்டியது அவசியம்: ஆர்பிஐ

டெல்லி: டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு தகவல்களை சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அனைத்து இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் கட்டண தளங்களும் இதுவரை வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை தங்களுடைய சர்வரில் சேமித்து வந்தன.

இதனால் வாடிக்கையாளர்கள் சிவிவி எண்ணை மட்டும் உள்ளிட்டு, ஓடிபி எனப்படும் ரகசிய எண்ணை உள்ளிட்டால் பரிவர்த்தனை நிறைவு பெறும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போதும் 16 இலக்க அட்டை எண், சிவிவி, காலாவதி தேதி ஆகிய அனைத்தையும் உள்ளிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த இத்தகைய புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை நடைமுறைகள் சற்றுதாமதமாகும் நிலை உண்டாகும். ஆனால் இது வாடிக்கையாளர்களின் வங்கிச் சேவை தகவல்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Tags : Debit card, credit card
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...