ஜம்மு காஷ்மீரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்‍ கொலை!: பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை..!!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய 2 முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அலூச்சி பாக் என்ற இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவரான அப்பாஸ் ஷேக் டி.ஆர்.எப். அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டவர் என்றும் மற்றொரு துணைத்தலைவர் சகீப் மன்சூர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் அலூச்சி பாக் என்ற இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இருவரும் பல்வேறு கொலை சம்பவங்கள், இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தது உள்ளிட்ட விவகாரங்களில் 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே காலை முதல் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சோப்பூரில் என்கவுண்ட்டர் தொடங்கியுள்ளது.  போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

Related Stories:

>