×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா; 354 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 39,486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.35 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.24 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 25,467 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,74,773 ஆக உயர்ந்தது.

* புதிதாக 354 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,486 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,20,112 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,19,551 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 97.68% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.98% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் இதுவரை 58,89,97,805 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.




Tags : India , Corona to 25,467 people in India in the last 24 hours; 354 deaths: 39,486 recovered from the infection and discharged
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...