×

டிவிட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை முதலிடம்

சென்னை: டிவிட்டர் ஹேஷ்டேக்கில் இந்திய அளவில் அஜித்தின் வலிமை முதலிடம் பிடித்திருக்கிறது.பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர், கடந்த 2007ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து, நேற்று 14வது ஆண்டு விழாவை கொண்டாடியது. இதனையொட்டி  டிவிட்டரில் நேற்று ஹேஷ்டேக் டே கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான நாட்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 டிவிட்டர் ஹேஷ்டேக் பட்டியலை டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தை நடிகர் அஜித்தின் வலிமை ஹேஷ்டேக் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் விஜயின் ‘மாஸ்டர் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மகேஷ்பாபு நடித்த சர்க்காரு வரி பாட்டா படம் இடம்பெற்றுள்ளது.

Tags : Twitter , Twitter hashtag, strength
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு