இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஏற்கனவே தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு வாக்களிப்பதற்காக உரிமை இருக்கிறது. எனவே 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும்” என்றார். முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் முடிவு வெளியாகி 6 மாதத்தில் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>