×

குளறுபடி குறித்து இன்போசிசுக்கு சம்மன்: ஐடி இணையதளம் செயல்பட துவங்கியது

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்க 164.5 கோடியில் இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒன்றிய அரசு, புதிய இணையதளத்தை (www.incometax.gov.in) கடந்த ஜூன் 7ம் தேதி அறிமுகம் செய்தது. இரண்டரை மாதங்கள் நிறைவடைந்தும், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தது.  இந்த சூழலில், கடந்த 2 நாட்களாக இந்த இணையதளம் முற்றிலுமாக முடங்கியது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேற்று நேரில் விளக்கம் அளிக்கும்படி இன்போசிஸ் நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் அவசர பரிமாரிப்பு பணி செய்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை முதல் வழக்கம் போல் வருமான வரித்துறை இணையதளம் செயல்பட துவங்கியது.  இந்நிலையில், இணையதளத்தில் ஏற் பட்ட அனைத்து பிர ச்னை களும் செப்.15க் குள் தீர்க்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறு வனத்திடம் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

Tags : Infosys , Infosys
× RELATED மாநிலங்களவை எம்பியாக சுதா மூர்த்தி பதவியேற்பு