அரசு மரியாதையுடன் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல் தகனம்

அலிகர்:  உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் முன்னாள் ஆளுனர் மற்றும் பாஜ மூத்த தலைவருமான கல்யாண் சிங்(89)  கடந்த சனியன்று உடல்நலக்குறைவால் லக்னோ மருத்துவமனையில் கல்யாண் சிங் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அலிகரில் இருந்து மறைந்த கல்யாண் சிங் உடல் நேற்று சொந்த கிராமமான நரோராவிற்கு எடுத்து செல்லப்பட்டது.  மகன் ராஜ்வீர் சிங், தந்தை கல்யாண் சிங் உடலுக்கு  இறுதி சடங்குகளை செய்தார். தொடர்ந்து மாநில அரசு மரியாதையுடன் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories:

>