×

சின்சினாட்டி ஓபன்: ஆஷ்லி சாம்பியன்: அலெக்சாண்டர் அசத்தல்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற வெஸ்டர்ன் அண்டு சதர்ன்  சின்சினாட்டி ஓபன் மகளிர் ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின்  ஜில் தெய்க்மனுடன் (76வது ரேங்க்) மோதிய ஆஷ்லி 6-3, 6-1 என்ற  நேர்செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 13 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் ஆஷ்லி வென்ற 5வது பட்டம் இது. ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்  உலகின் 4ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 6-2, 6-3 என நேர் செட்களில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்.

Tags : Cincinnati Open ,Ashley ,Alexander the Great , Cincinnati Open, Ashley, Champion
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன்