தொழிலாளர்களின் கோரிக்கையை வெல்ல தொமுச பாடுபடும்: பொதுச்செயலாளர் சண்முகம் அறிக்கை

சென்னை: இதுகுறித்து தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொமுச பேரவை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்றிட வேண்டுமென்று அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் எதிர்ப்பார்ப்பு என்பது நியாயமானதுதான். அதே நேரத்தில் கொரோனா எனும் பெருந்தொற்று, தமிழகத்தில் தற்போது உள்ள நிதிநிலைமை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதோடு ஆட்சியமைந்து 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நியாயமானது என்றாலும் அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொண்டு, தற்போது மாற்று முகாமில் உள்ளவர்கள் ஏற்படுத்த முற்படும் குழப்பங்களுக்கும், வதந்திகளுக்கும் தொழிலாளர் தோழர்கள் இரையாக வேண்டாம். தொமுச பேரவை உங்களின் கோரிக்கையை வென்றெடுக்க உங்களோடு இணைந்து பணியாற்றும். கோரிக்கைகளை வென்றுத் தருவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: