×

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் கைதாகினர். நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துகளை ‘யூடியூப்’பில் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகை மீராமிதுனும், அவரது நண்பரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வன்கொடுமை தடை சட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகை மீரா மிதுனின் பேச்சு சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும்,  மோதலை தூண்டும் விதமாக பேசும்மீரா மிதுன், இதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலன்விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


Tags : Mira Midun , Actress Meera Mithun and her friend's bail plea dismissed under anti-torture law: Special court orders
× RELATED நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்