×

இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம்: ஷைலிசிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்..! அஞ்சு பாபி ஜார்ஜ் நம்பிக்கை

நைரோபி: கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உலக இளையோர் யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. நீளம் தாண்டுதலில் நேற்று இறுதிச்சுற்று நடந்தது. இதில் 17 வயதான இந்திய வீராங்கனை ஷைலி சிங் 6.59 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் ஸ்வீடனின் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளம் தாண்டி தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இந்த இருவருக்கு இடையிலான இடைவெளி வெறும் 1 செ.மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2003 உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அஞ்சு பாபிஜார்ஜ் 6.83 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார்.

இதுவே தேசிய சாதனையாக உள்ளது. அஞ்சு பாபி ஜார்ஜின் கணவர் ராபர்ட் தான் ஷைலி சிங்கிற்கு பயிற்சி அளித்து வருகிறார். இதுபற்றி அஞசுபாபி ஜார்ஜ் கூறுகையில், ஷைலி எனது தேசிய சாதனையை முடியடிப்பார். அவர் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற உதவுவதே எனது இலக்கு. எங்கள் பயிற்சியில் அவர் பதக்கம் வென்றால் அது என்னுடையதாகவே கருதுவேன். அவள் ஒரு கடினமான வைரம். திறன் கொண்ட ஒரு  வீரரைக் கண்டுபிடிப்பது ஒரு மதிப்புமிக்க விஷயம். நாங்கள் அவளுக்கு வழிகாட்டினால், அவள் அதை பெரிதாக்குவாள் என்று தெரியும், என்றார். யு20 தடகள சாம்பியன்ஷிப்பில் இதுவரை இந்தியா 2 வெற்றி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களுடன் பட்டியலில் 21வது இடத்தில் உள்ளது.

3 வேளை உணவுக்கே சிரமம்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி சிங்கின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. 3 வேளை உணவு கிடைப்பதே கடினம். அவரின் தாய் வினிதா மகளுக்கு பெரிதும் ஊக்கமாக இருந்துள்ளார். தையல் வேலை செய்து அவர் தனது 3 குழந்தைகளை கவனித்து வருகிறார். பள்ளி அளவிலான போட்டிகளில் ஷைலி  காலணிகூட இல்லாமல் விளையாடி உள்ளார். விஜயவாடாவில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்றபோது தான் அஞ்சுஜார்ஜ் அவரின் திறமையை பார்த்து, கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வெள்ளி வென்ற பின் ஷைலி கூறுகையில், இறுதி வரை கவலைப்பட வேண்டாம் என்று அம்மா என்னிடம் சொன்னார். நான் தங்கம் வெல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். அடுத்த முறை, நான் தங்கம் வெல்வேன், என்றார். ைஷலி சிங்கிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாகூர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Youth Athletics Championships ,Styling Olympics ,Bobby George , Silver medal at the Youth Athletics Championships: Winning a medal at the Shyling Olympics ..! Five Bobby George hopes
× RELATED இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில்...