×

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கண்டறியப்பட்ட, குறைவாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் குருதி சார் ஆய்வு ... தமிழக சுகாதாரத்துறை முடிவு

சென்னை : தமிழ்நாட்டில் 3ம் கட்ட சரோ சர்வே முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கண்டறியப்பட்ட அல்லது குறைவாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் குருதி சார் ஆய்வு நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய 3ம் கட்ட குருதி சார் ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 62.2% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டது. குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37% பேருக்கும் தொடர்ச்சியாக கோவை, திருப்பூர், நாகை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கூடுதல் தடுப்பூசி போடும் பணிகள் சுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கண்டறியப்பட்ட மற்றும் குறைவாக கண்டறியப்பட்ட 5 மாவட்டங்களை தேர்வு செய்து மீண்டும் குருதி சார் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.


Tags : Tamil Nadu Health Department , நோய் எதிர்ப்பு சக்
× RELATED மதுரை எய்ம்ஸ் விவகாரம் ஒன்றிய நிதி...