பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு.: ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது ஐகோா்ட்

சென்னை: பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கையை ஐகோா்ட் நிராகரித்தது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14-ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அந்த கூட்டறிக்கை கூறியது, கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் பெங்களூரு புகழேந்தி நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த காரணம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் வரும் 27-ம் தேதிதான் பட்டியலிடப்படும் என நீதிபதி நிர்மல்குமார் கூறியுள்ளார்.

Related Stories:

>