தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் : பிரதமர் மோடியை சந்தித்து பீகார் முதல்வர் தலைமையிலான குழு வலியுறுத்தல்!!

பாட்னா: பீகார் முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு இன்று பிரதமர் மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, வலியுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதனை சாதிவாரியாக நடத்துமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் எஸ்சி, எஸ்டி பிரிவினரை தவிர மற்றப் பிரிவு மக்களை சாதிவாரியாக கணக்கிடக் கூடாது என்றுக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஆனாலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையிலான குழு இன்று பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருடன் பீகாரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதி அடங்கிய 11 பேர் கொண்ட குழு மோடி சந்தித்து வலியுறுத்தியது. இந்த குழுவிற்கு முதல்வர் நிதிஷ்குமார் தலைமை தாங்குகிறார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>