×

அண்ணா நூலகம் கடந்த ஆட்சியில் திருமணத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு பாழடிக்கப்பட்டது!: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த ஆட்சியில் திருமணத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு பாழடிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் காலங்களில் அண்ணா நூலகம் செம்மைப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய செங்கம் தொகுதி உறுப்பினர் கிரி, கடந்த ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மோசமான நிலையில் வீணடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், அண்ணா நூலகத்திற்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கல்வி தொலைக்காட்சி உள்ளிட்ட பணிகள் அங்கு நடைபெற்றதாகவும் கூறினார்.

செங்கோட்டையன் கருத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு நூலகம் திருமணத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு பாழடிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். அண்ணா நூலகம் நீதிமன்றத்திற்கு சென்று மீட்கப்பட்டதாகவும், வரும் காலங்களில் நூலகத்தை செம்மைப்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் கூறினார். திமுக ஆட்சி காலத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரமைக்கப்பட்டு உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Tags : Anna Library ,Stalin , Anna Library, Marriage, Rent, Chief Stalin
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...