கொள்ளிடம் அருகே 10 ஆண்டாக ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் சாலை: சீரமைக்க கோரிக்கை

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த கடுக்காய்மரம் கிராமம் உள்ளது. இங்கு கீழத்தெரு சாலை ஒரு கி.மீ. தொலைவில் மிகவும் சேதமடைந்து கருங்கல் ஜல்லி பெயர்ந்த நிலையில் உள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடுக்காய் மரம் கீழத்தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை மேம்படுத்தப்படாமல் கைவிடப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமம் அடைந்து வருகின்றனர். வாகன விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இச்சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே இந்த சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கிராம மக்கள் சார்பில் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Stories:

More
>