கறம்பக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான திறனறிதல் தேர்வு

கறம்பக்குடி: கறம்பக்குடி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளிகளில் 5ம் வகுப்பு படித்து 6ம் வகுப்பு செல்லக்கூடிய எஸ்சி,, எஸ்டி., மாணவர்களுக்கான திறனறிதல் தேர்வு நடந்தது. அனுமார்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அர்ஜுனன் ஆகியோர் மேற்பார்வையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கமணி, பெரியசாமி, ராஜா ஆகியோர் தேர்வுகளை நடத்தினர். இத்தேர்வில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இருந்து தலா ஒரு மாணவர் வீதம் தனிநபர் இடைவெளி, முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வை நடத்தினர்.

Related Stories:

>