×

‘விபத்தில் உயிர் பிழைத்ததற்கு நேர்த்திக்கடன்’ 2,400 படிக்கட்டுகளில் அங்கப்பிரதட்சணம் செய்து ஏழுமலையானை தரிசித்த பக்தர்

திருமலை: விபத்தில் உயிர் பிழைத்ததற்கு நேர்த்திக்கடனாக 2,400 படிக்கட்டுகளில் அங்கப்பிரதட்சணம் செய்து ஏழுமலையானை பக்தர் ஒருவர் தரிசனம் செய்தார்.ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் பொன்னால பிரபாகர். இவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். பொன்னால பிரபாகர் நேற்று முன்தினம் சித்தூர் மாவட்டம், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி வாரி மெட்டு நடைப்பாதை வந்தார். அங்கிருந்து மலைப்பாதையில் 2,400 படிக்கட்டுகளில் அங்கப்பிரதட்சணம் செய்தபடியும், கோவிந்த நாமாவளிகள் பாடியபடியும் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இதுகுறித்து பொன்னால பிரபாகர் கூறுகையில், ‘கடந்த 2007ம் ஆண்டு எனக்கு நடந்த விபத்து ஒன்றில் சிக்கி உடல் நலம் கடுமையாக பாதித்தது. உயிர் பிழைத்து மீண்டு வருவேனா என்ற நிலை இருந்தது. எனக்கு ஏழுமலையான் மறுவாழ்வு அளித்தார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அலிபிரியில் இருந்து திருமலைக்கு அங்கப்பிரதட்சணம் செய்தபடி வந்தேன். பின்னர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இருந்து திருமலைக்கும், தற்போது சீனிவாசமங்காபுரத்திலிருந்து திருமலைக்கும் அங்கப்பிரதட்சணம் செய்தேன். எனது உயிரை காப்பாற்றி மறுவாழ்வு அளித்த ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சனம் செய்தேன்’ என உருக்கமுடன் தெரிவித்தார்.

Tags : Ezhumalayana , Devotee visits Ezhumalayana on 2,400 steps
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி...