×

கொரோனாவையே பின்னுக்குத்தள்ளிய வலிமை.. ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முந்திய அஜித்!

டெல்லி : ஹேஷ்டேக் டேவை முன்னிட்டு 2021 முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டான 10 ஹேஷ் டேக்குகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அஜித்தின் வலிமை, விஜய்யின் மாஸ்டர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.ஹேஷ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடு. முக்கியமாக இது ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட முதல் 10 ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில், வலிமை முதலிடத்தையும் ‘மாஸ்டர்’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் ‘அஜித் குமார்’ என்ற ஹேஷ்டேக்கும் ஐந்தாவது இடத்தில் ‘தளபதி65’ என்ற ஹேஷ்டேக்கும் இருக்கிறது.உலகமெங்கும் கோடான கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் ‘பிடிஎஸ்’ எட்டாவது இடத்திலும் உலகையே ஆட்டிப்படைத்த ‘கொரோனா’ 9வது இடத்திலும் தான் இருக்கிறது. தெலுங்குத் திரையுலகம் சம்பந்தப்பட்ட சர்க்காரு வாரி பாட்டா மூன்றாவது இடத்திலும், வக்கீல் சாப் 10 வது இடத்திலும் உள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்கள்தான் டுவிட்டர் தளத்தில் டாப்பில் உள்ளனர்.நீண்ட நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில், அந்தப் படத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்த நினைவுகூறத்தக்கது.


Tags : Ajith ,Twitter , ட்விட்டர் நிறுவனம்
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!