×

அமெரிக்கா, நாட்டோ படைகளில் பணியாற்றிய ஆப்கனியர்களுக்கு வலைவீச்சு :காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாலிபான்கள் தாக்குதல்!!

காபூல் : அமெரிக்கா மற்றும் நாட்டோ படைகளில் பணியாற்றிய ஆப்கனியர்களை தேடும் நடவடிக்கையாக பல்வேறு நகரங்களில் தாலிபான்கள் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி 8 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பதற்றம் சற்றும் தணியவில்லை. முதல் நடவடிக்கையாக அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கனியர்கள் மீது தாலிபான்களின் கவனம் திரும்பியுள்ளது. அமெரிக்க ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட தரவுகள் அடிப்படையில், ஆப்கன் முழுவதும் தாலிபான்கள் 4 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் காபூல் தாலிபான்கள் பிறப்பிடம் எனப்படும் காந்தகார் உள்ளிட்ட இடங்களில் தாலிபான்கள் வாகனங்களை மறித்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தாலிபான்களின் கெடுபிடி காரணமாக நாட்டை விட்டு தப்பி செல்லும் நோக்கில், காபூல் விமான நிலையத்திற்கு வரும் ஆப்கனியர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.விமான நிலையத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்திய தாலிபான்கள் சந்தேகப்படுவோரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதாக கூறும் மக்கள் தங்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்குமாறு வெளிநாட்டு பாதுகாப்புப் படையினரிடம் கெஞ்சுகின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆப்கனியர்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து அங்கு அமெரிக்க மற்றும் பிரிட்டன் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Afghans ,US ,NATO ,Taliban ,Kabul airport , நாட்டோ
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!