×

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது இப்போதைக்‍கு தேவையில்லை!: எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா விளக்கம்..!!

டெல்லி: இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது இப்போதைக்கு தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தக்கூடியவை. கொரோனா தடுப்பூசிக்கும் அதன் செயல்திறன் எவ்வளவு காலம் இருக்கும் என்று தெரியவில்லை. எனவே ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறனை நீட்டிக்கும் வகையில் ‘பூஸ்டர் டோஸ்’ என்றொரு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறிப்பிட்ட தடுப்பூசியின் செயல்திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கொரோனா நுண்கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை மேலும் அதிகரிக்க செய்யும் வகையில் 3ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வல்லரசு நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 3ம் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 8 மாதங்களை நிறைவு செய்த அனைத்து அமெரிக்கர்களும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதேபோல் இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா என எய்ம்ஸ் இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது இப்போதைக்‍கு தேவையில்லை என்றும் இது தொடர்பாக மேலும் தரவுகள், ஆய்வுகள் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது தொடர்பாக தரவுகள் கிடைக்கும் என்றும் அதன்பிறகே பூஸ்டர் தடுப்பூசி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.


Tags : India ,AIIMS ,Randeep Gularia , India, Director of Booster Vaccine, AIIMS
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...