×

உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50 % இடஒதுக்கீட்டை பெற சட்டம் இயற்ற வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50 % இடஒதுக்கீட்டை பெறுவதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  50 சதவீத இடங்கள் மீண்டும் கிடைத்திட சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவசர சட்டம் இயற்றி  குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்புகளை படித்த வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களில் 80 % பேர்2 ஆண்டு கட்டாயப் பணியை புறக்கணித்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்புகளை படித்த மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்து 50 சதவீத இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை கூறி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Tags : Physicians Association , Higher Specialized Medical Degree, Reservation, Law, Physicians
× RELATED பெரம்பலூரில் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்