சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுத்து ஒதுக்கீடு வழங்க வேண்டும்: தமிழ்நாடு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: மண்பாண்ட தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், யோகீஸ்வரர்கள், ஆண்டிப்பண்டாரம், தாசரி, போயர் ஓட்டா, வேட்டுவக்கவுண்டர்,  வேட்டைக்காரர், குன்னுவர். மண்ணடி, நோக்கன், சோனியன் செட்டி போன்ற 40 சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலம் படுமோசமானதாக இருக்கும்.

எனவே, அடித்தளத்தில் வறுமைக்கோட்டில் வாழ்ந்து வருகின்ற அம்மக்களுக்கு உரிய  உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்புகளும் சமூகநீதியும் பெற்றிட இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் அனைத்து கட்சிதலைவர்களுடன் டெல்லி சென்று ஒன்றிய அரசின் பிரதமர் மோடியை சந்தித்து சாதி வாரியாக கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசு மூலம் எடுத்து அவரவர்களுக்கு உரிய ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>