காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி

காஞ்சிபுரம் : காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான 30 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்கியது. காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான 30 ஓவர் கிரிக்கெட் தொடர் காஞ்சிபுரம் தனியார் பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியை காஞ்சிபுரம் மகரிஷி பள்ளி நிறுவனர் பாலா சுப்பிரமணியன், காமாட்சி அம்மன் திருக்கோவில் ஸ்தானீகம் நடராஜ சாஸ்திரி, ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் விஜய பாஸ்கர், ஜீ. எஸ். அசோஸியேட்ஸ் ஞான சேகரன், பவர் பிளாஷ் கிரிக்கெட் அணி பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காஞ்சி கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வினோத்குமார் செய்து வருகிறார்.

Related Stories:

>