குன்றத்தூர் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த 1000 பேர் திமுகவில் இணைந்தனர்

ஸ்ரீபெரும்புதூர்:  குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து  அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா நேற்று குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமை வகித்தார். படப்பை ஊராட்சி பொறுப்பாளர் ஏழுமலை வரவேற்றார். விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>