வண்டலூர் ஊராட்சியில் திமுக சார்பில் கலந்தாய்வு கூட்டம்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் ஊராட்சியில் திமுக சார்பில் கலந்தாய்வு கூட்டம் வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவேந்திரன், காசி, கார்த்திகேயன்,  பூபாலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ, மாவட்ட துணைச்செயலாளர் அன்புசெழியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலகுழு அமைப்பாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு சீட் கொடுப்பது குறித்து கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அந்த முடிவுக்கு தேர்தலில் போட்டியிடும் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும், மேலும் திமுக சார்பில் போட்டியிடும் அனைவரையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆப்பூர் சந்தானம், ஏ.ஜே.ஆறுமுகம், ஏ.விஜயகுமார், கே.எஸ்.ரவி, ஏவிஎம் இளங்கோவன், ஆ.கருணாகரன், ஜெகன், உட்பட மாணவரணி, இளைஞரணி, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: